பலூசிஸ்தானில் குண்டுவெடிப்பு; 2 குழந்தைகள் பலி

பலூசிஸ்தானின் துர்பாத் மாவட்டத்தில் ஹொசாப் பகுதியில் வீட்டின் வெளியே குழந்தைகள் சிலர் விளையாடி கொண்டிருந்துள்ளனர்.  இந்த நிலையில், திடீரென குண்டுவெடிப்பு நடந்துள்ளது.  இதில் 3 குழந்தைகள் உள்பட சிலர் காயமடைந்து உள்ளனர்.

அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  எனினும், 2 குழந்தைகள் செல்லும் வழியிலேயே பலியாகி உள்ளனர்.

குண்டுவெடிப்பு நடந்த பகுதியை போலீசார் தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.  இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.  இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

Comments are closed.