பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பது தொடர்பில் அவதானம்

அரச பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை   இந்த ஆண்டில் பல்கலைக்கழகங்களில் மேலதிகமாக 10 ஆயிரம்  பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான  அறிவிப்பு எதிர்வரும்  பெப்ரவரி மாதம்  8 ஆம் திகதி வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை  பல்கலைக்கழகங்களில் மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கை  தொடர்பான திட்டம் மீளாய்வு செய்யப்பட்டு   புதியமுறைமை அறிமுகப்படுத்தப்படும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு  மேலும் தெரிவித்துள்ளது.

Comments are closed.