பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து முக்கிய கலந்துரையாடல்

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக, சுகாதார அமைச்சுடன்  கலந்துரையாடலை ஆரம்பிக்கத் தயார் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி அடுத்தவார முற்பகுதியில் இந்த கலந்துரையாடலை மேற்கொள்ள முடியுமென ஆணைக்குழுவின் தலைவரான, பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக, மாணவர்களின் விடுதி பயன்பாடு, சுகாதார பாதுகாப்பு, விரிவுரையாளர்களின் சுகாதார பாதுகாப்பு என்பன தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைவாக விரைவான தீரமானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுளளார்.

Comments are closed.