பல்கலை மாணவர்களுக்கான புதிய திட்டம்!
பல்கலைக்கழகங்களில் புதிதாக அனுமதி பெற்ற மாணவர்களுக்கு சலுகை அடிப்படையில் மடிக்கணனிகளை வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்துள்ளார்.
தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகை!யில் முழுமையான கல்வி முறையையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கான “செழிப்பு பார்வை” என்ற நோக்கின் அடிப்படையில் மக்கள் வங்கியின் உதவியுடன் இந்த திட்டத்தை பல்கலைக்கழக மானிய ஆணையக்குழு செயற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்காக மக்கள் வங்கி ரூ .03 பில்லியனை ஒதுக்கியுள்ளது.
இணைய இணைப்பு, மென்பொருள் தொகுப்பு மற்றும் 4 ஆண்டுகால உத்தரவாதத்துடன் மடிக்கணனிகளை வழங்குகிறது. ஒரு கணனியின் மதிப்பு 80,000 ரூபாய். வேலை கிடைத்த பின்னர் 06 ஆண்டுகளில் மொத்த தொகையை திருப்பிச் செலுத்தக்கூடிய வகையில் கடன்கள் வழங்கப்படுகின்றன.
மாணவர்கள் தமது கல்வி கற்கும் காலத்தில் மாதாந்தம் ரூ .500.செலுத்தலாம்.
இன்று (09) காலை ஜனாதிபதி செயலகத்தில் 2021 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்ற ஆறு புதிய மாணவர்களுக்கு இந்த திட்டத்தை குறிக்கும் கடிதங்களை ஜனாதிபதி வழங்கினார்.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பீரிஸ், ஜனாதிபதி செயலாளர் பி.பி. ஜெயசுந்தர, கல்விஅமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டனர்.