பள்ளத்தில் வீழ்ந்து மகிழுந்து விபத்து

நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த மகிழுந்து ஒன்று இன்று (09) காலை தலவாக்கலை – சென். கிளயார் தோட்டப் பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

சந்தேக நபர் கொட்டகலை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

விபத்து இடம்பெற்ற வேளையில் குறித்த நபர் மதுபோதையில் இருந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

காயமடைந்த நபர் தற்போது நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Comments are closed.