பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 26 ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து பெண்கள் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பேட்ஸ் 126 ரன்கள் குவித்தார்.

Comments are closed.