பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டல்கள் அடுத்த வாரங்களில்

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் கல்வி மற்றும் சுகாதார அதிகாரிகளினால் அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து கல்வி மற்றும் சுகாதார அமைச்சக அதிகாரிகளுடன்  கலந்துரையாடி வருகின்றோம்.

எனினும் மீள ஆரம்பிப்பதற்கான ஒரு திகதி இன்னும் தீர்மானித்துக் கொள்ளவில்லை.

தற்சமயம் பாடசாலை ஆசிரியர்களுக்கான தடுப்பூசி செயல்முறை முடிவடையும் நிலையில், நாடு முழுவதும் 240,000 ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் செயல் திட்டத்தை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரம் பரீட்சைகளும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட சாதாரணதர பரீட்சைகளும் நடத்துவதற்கான தேவையான திட்டங்களையும் பரிசீலித்துவருகின்றோம்.

அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் செயற் திட்டத்தை துரிதப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.