பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள தகவல்

பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் 7ஆம் திகதி பாடசாலைகள் மீளத் திறக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சாரத்தடை காரணமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில், அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

Comments are closed.