பாடசாலைகளை மீள ஆரம்பிக்க திட்டம்

தென் மாகாணத்தில் உள்ள, 200 மாணவர்களுக்கும் குறைந்த பாடசாலைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பா, எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கான நடவடிக்கைகள், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.