பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் தெரிவித்த விடயம்

ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை துறை சார்ந்தோருக்கு 2ஆம் தடுப்பூசி வழங்கி நிறைவு செய்யப்பட்டதன் பின்னர், பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ. எல். பீரிஷ் தெரிவித்தார்.

பாடசாலைகள் இன்னும் ஆரம்பிக்கப்படாதுள்ள நிலையில், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வித்துறை சார்ந்தோரை வழமையான பணிக்கு அழைத்துள்ளமை தொடர்பாக இன்று நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைக் கூறினார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே தற்போது நிர்வாகத்தரப்பினர் அழைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.