பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் அறிவிப்பு

இலங்கையில் பாடசாலைக் கல்வியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான இறுதி முடிவை எதிர்வரும் 21ம் திகதி எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.

மத்துகமவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், கட்டம் கட்டமாக பாடசாலைகளை மீண்டும் திறக்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பிரதமருக்கும், இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) மற்றும் அதிபர் சங்க உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் நடந்தது, அதில் அவர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சனைக்கு பயனுள்ள தீர்வு எட்டப்பட்டுள்ளது.

இதன்படி மூன்று தவணைகளில் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் ஒப்புக்கொண்டார் என்று தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தினேஷ் குணர்த்தன இதனை கூறிய போதும், தமக்கான சம்பள உயர்வு ஒரே தடவையில் வழங்கப்படவேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Comments are closed.