பாடசாலைப் போக்குவரத்து சேவைகளில் சுகாதார விதிமுறைகள் குறித்து விசேட பரிசோதனை!!
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்றுகின்றனவா? இல்லையா? என்பது தொடர்பில் விசேட சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
காவற்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எழுந்தமானமாக பி.சீ.ஆர் பரிசோதனை மற்றும் ரெபிட் எண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.