பாடசாலையில் மாணவி ஒருவர் திடீரென உயிரிழப்பு!

பாடசாலையில் வைத்து மதிய உணவு உட்கொண்டதன் பின்னர் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொணராகலை – புத்தள பிரதேசத்தில் உள்ள துட்டகைமுனு தேசிய பாடசாலையைச் சேர்ந்த 06ஆம் வகுப்பு மாணவியே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரியவருகின்றது.

பாடசாலைக்கு சமூகமளித்திருந்த குறித்த மாணவிக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டதை அடுத்து புத்தள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொணராகலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

பாடசாலையில் வைத்து மதிய உணவு உட்கொண்டதன் பின்னர் திடீரென மாணவி மயக்கமுற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த மாணவி, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின் சுமார் 30 நிமிடங்கள் அவருக்கு சிகிச்சையளிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

Comments are closed.