பாடசாலை மாணவர்களுக்கான சிசு செரிய பேருந்து சேவை இன்று முதல்

பாடசாலை மாணவர்களுக்கான சிசு செரிய பேருந்து சேவை இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சருடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இன்று பாடசாலைகள் திறக்கப்படுகின்றமைக்கு அமைவாக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேவைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சிசு செரிய பேருந்து சேவைகளை பெற்றுக் கொள்ளும் வகையில், டிப்போ ஒருங்கிணைப்பாளர்களின் தொடர்பு இலக்கங்கள் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments are closed.