பாடசாலை மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் ஓர் விசேட அறிவித்தல்

2020ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை செல்லுபடியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனை கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது

அத்தோடு கொரோனா வைரஸ் அச்சம் ஏற்பட்டதன் நிமித்தம் நாட்டில் பல பாகங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதனை அடுத்து, பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

அதேபோல்,கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டதாலும்,பல பகுதிகளுக்கு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாலும் பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இதுபோன்ற காரணங்களால் பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலத்தினை எதிர்வரும் 28ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டதாக கல்வி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.