பாடசாலை மாணவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

இலங்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வரும் நிலையில், 18 மற்றும் 19 வயது பாடசாலை மாணவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.

அதற்கிணங்க, மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டமானது இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, ஹோமாகம, ஸ்ரீஜயவர்த்தனபுர, பிலியந்தல ஆகிய கல்வி வலயங்களில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.