பாடசாலை மாணவர்களைப் போதைப்பொருள் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்!

பாடசாலை மாணவர்களைப் போதைப்பொருள் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க விசேட வேலைத் திட்டத்தைச் செயற்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸ் துறை ஒன் றிணைந்து விசேட வேலைத்திட்டமொன்றைச் செயற் படுத்தத் தீர்மானித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச் சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதன் படி மிக விரைவில் இது தொடர்பான விழிப் புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக் கவுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Comments are closed.