பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் பொதுப்போக்குவரத்து சேவை தொடர்பில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை

பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் பொதுப்போக்குவரத்து சேவை தொடர்பில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சேவை  சாரதிகள் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றி பொறுப்புடன் செயற்பட  வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மாணவர்கள் வாகனங்களுக்குள் உள்வரும் போதும் வெளியேறும் போது பாதுகாப்பு முகக்கவசங்கள் அணிதல்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாடசாலை வாகனசேவை மற்றும் பொதுப்போக்குவரத்தில் பயணிக்கும் மாணவர்கள் எவருக்கேனும் வைரஸ் பரவல் தொடர்பான அறிகுறிகள் காணப்படுமாயின் சாரதிகள் சுகாதார தரப்பினருக்கு உடன் அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்

Comments are closed.