பாடசாலை மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!!

பாடசாலை மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட குற்றச்சாட்டில் திருகோணமலை நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 35 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

13 வயது மாணவியின் தாயார் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் வேறு யாரும் இல்லாதபோது நுழைந்து மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Comments are closed.