பாலர் பாடசாலை மாணவிக்கும் அவருடைய பெற்றோருக்கும் கொரோனா தொற்று உறுதி!

ஹம்பாந்தோட்டை சூரியவெவ பகுதியில் பாலர் பாடசாலை மாணவி ஒருவர், அவருடைய தாயார் மற்றும் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த பாலர் பாடசாலையின் 33 மாணவர்கள் மற்றும் 37 குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் தனிமைப்படுத்திக் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நீர்கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட துரித ஆன்டிஜன் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.