பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமலுக்கு பதிலாக ஸ்ருதி

தமிழ் தனியார் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சியின் தற்போதைய சீசன் வரை உலக நாயகன் கமல் ஹசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று வந்த கமல் ஹசன் அவர்கள் தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது தனிமைப்படுத்தலில் சிகிச்சைப் பெற்று வரு கமல் ஹசன் அவர்களுக்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்க போகிறார் என்ற கேள்வி தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது சில நாட்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் அவர்களுது மகள் சுருதி ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது . அதன்படி பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை கமல் ஹாசனுக்கு பதிலாக, ஸ்ருதி தொகுத்து வழங்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Comments are closed.