பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

பாதுகாப்பான தேசத்திற்காக எமது தாய் நாட்டின் எதிர்காலம் குறித்து மக்கள் எம் மீது கொண்ட நம்பிக்கையை அன்புடன் நினைவுகூர்வதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மிகக் குறுகிய காலமே ஆன போதிலும், அக்காலப்பகுதியை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக செலவிடக்கூடியதாக அமைந்தமை குறித்து பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொவிட்-19 தொற்று காரணமாக மக்கள் மீது சுமைகள் சுமத்தப்படாதிருக்கும் வகையில் உச்ச தலையீட்டுடன் அரசாங்கம் பங்களிப்பு செலுத்திவருகிறது.  நாடு எதிர்கொண்டுள்ள இந்த சவால்களை மலர்ந்துள்ள புத்தாண்டில் நாம் ஒன்றிணைந்து வெற்றிக்கொள்ள முடியும் என, பிரதமர் தெரிவித்துள்ளார்.

மலர்ந்துள்ள 2021 புத்தாண்டு அனைவருக்கும்  சுபீட்சம் மிகுந்த புத்தாண்டாக அமைய பிரார்த்திப்பதாக, பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.