பிரதமர் மோடி இன்று இமாச்சலபிரதேசம் பயணம்

இமாச்சல பிரதேசத்தில் ரூ.11,000 கோடி மதிப்பிலான நீர்மின் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று இமாச்சல பிரதேசம் மாநிலம் மண்டிக்கு ஒரு நாள் பயணமாக செல்கிறார்.

மேலும் சுமார் 30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ரேணுகாஜி அணை திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் என்றும் அதனை தொடர்ந்து, இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிரதமர் மோடி தலைமை தாங்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 மெகாவாட் திறன் கொண்ட ரேணுகாஜி அணை திட்டம் சுமார் ரூ.7000 கோடி செலவில் கட்டப்படும்.இது டெல்லிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக அடிக்கல் நாட்டப்படும். 210 மெகாவாட் திறன் கொண்ட லுஹ்ரி நிலை-1 நீர் மின் திட்டம்  ரூ.1800 கோடி செலவில் கட்டப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு 750 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை தொடர்ந்து தவுலாசித் நீர் மின் திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல்  நாட்டுகிறார். 66 மெகாவாட் திறன் கொண்ட இந்த திட்டம் ரூ.680 கோடி செலவில் கட்டப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு 300 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சவ்ரா-குட்டு நீர் மின் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.111 மெகாவாட் தீரன் கொண்ட இந்த திட்டம் சுமார் ரு.2080 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 380 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.இதனால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.120 கோடி வருவாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட  செய்திக்குறிப்பில், “இமாச்சல பிரதேச உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவார். சுமார் ரூ.28,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்குவதன் மூலம் இப்பகுதியில் முதலீட்டுக்கு இந்த சந்திப்பு ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் உள்ள வளங்களின் பயன்படுத்தப்படாத திறனை முழுமையாகப் பயன்படுத்துவதில் பிரதமர் மோடி தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இது சம்பந்தமாக, இமயமலைப் பகுதியில் உள்ள நீர்மின் திறனை உகந்ததாகப் பயன்படுத்துவது ஒரு படியாகும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.