பிரதமர் மோடி மகா சிவராத்திரியை முன்னிட்டு வாழ்த்து

ஒவ்வொரு வருடமும் குளிர்காலம் முடிந்து, வசந்த மற்றும் கோடை காலம் தொடங்கும் சூழலில், மகா சிவராத்திரி வருகிறது.  ஓராண்டில் 12 சிவராத்திரிகள் கொண்டாடப்பட்டாலும் மகா சிவராத்திரி வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் விரதம் மற்றும் சிறப்பு பூஜையை மேற்கொள்வார்கள்.

இதனை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உங்கள் அனைவருக்கும் மகா சிவராத்திரி தினத்தில் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.  கடவுள்களின் கடவுள், மகாதேவ் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கட்டும்.  ஓம் நமசிவாய என தெரிவித்து உள்ளார்.

Comments are closed.