பிரபல இளம் வீராங்கனை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளம் துப்பாக்கி சுடும் வீராங்கனை குஷ் சீரத் கவுர் சந்து ( வயது 17). இவர் தனது பரித்கோட் இல்லத்தில் நேற்று  காலை தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கவுர் சந்து  தேசிய அளவிலான போட்டிகளில் பலபதக்கங்களை வென்றுள்ளார். ஆனால் சமீபத்தில் முடிவடைந்த 64-வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் அவர் தோல்வி அடைந்தார். இதனால் அவர் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

Comments are closed.