பிரபல நடிகையை காதலிப்பதை உறுதி செய்த கவுதம் கார்த்திக்

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் கவுதம் கார்த்திக். இவர் பிரபல நடிகையைக் காதலிப்பதை உறுதி செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இளம்  நடிகர் கவுதம் கார்த்திக். இவர் மணிரத்னம் இயக்கிய கடன் படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர், இவன் தந்திரன், தேவராட்டம் , இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஆனந்தம் விளையாடும் வீடு  உள்ளிட்ட ப்டங்களில் நடித்துள்ளார்.

இவர்  நடிகை மஞ்சிமா மோகனை காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில் மஞ்சிமா மோகனன் பிறந்த நாளை முன்னிட்டு  கவுதம் கார்த்தி  அவரது புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில்,  என் வாழ்க்கையில் உன்னைப் போன்ற பெண் இணைவதைப் பெருமையாகக் கருதுகிறேன்..நீ எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க என் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார். இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர்.

Comments are closed.