பிரபல பிஸ்கட் விற்பனை நிறுவனத்தின் விற்பனையாளர் ஒருவரால் பலருக்கு சிக்கல்
கம்பளை பிரதேசத்தில் பி.சீ.ஆர் பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிரபல பிஸ்கட் விற்பனை நிர்வனத்தின் விற்பனையாளர் ஒருவர் கம்பளை, வெலிகல்ல, கெலிஓயா மற்றும் பிலிமத்தலாவ போன்ற இடங்களுக்கு சென்று வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக கம்பளை, வெலிகல்ல, கெலிஓயா மற்றும் பிலிமத்தலாவ பகுதியில் பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், அவ் வர்த்தக நிலையங்களில் தொழில் புரியும் ஊழியர்களிடம் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை , இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 41 ஆயிரத்து 603 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் , நாட்டில் இதுவரை கொறோனா தொற்றால் 194 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.