பிரான்ஸில் உயிரிழந்த யாழ் யுவதிகளின் மரணம் தொடர்பாக வெளிவரும் தகவல்கள்
அண்மையில் ஈழத் தமிழ் பின்னணி கொண்ட மருத்துவபீட மாணவியான சிநேகா சந்திரராஜா உயிரிழந்த சம்பவம் பாரிஸ் பல்கலைக்கழக சமூகத்தினர் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மாணவி சிநேகாவின் மரணம் தொடர்பாக மாணவர் சமூகத்தை விழிப்பூட்டும் செய்தி ஒன்றை செபோன் மருத்துவ பீடாதிபதி – மாணவியின் தற்கொலையைக் குறிப்பிடாமல்- அனைவருக்கும் பகிர்ந்துள்ளார்
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதுடன், மாணவர்களும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.
அத்துடன் வகுப்பறைகளுக்குத் தொலைவில் வீடுகளிலும் விடுதிகளிலும் இருந்தவாறு பாடங்களையும் பரீட்சைகளையும் டிஜிட்டல் வழிமுறைகளில் எதிர்கொள் வது தனிமையைப் பெருக்குவதுடன் மாணவர்களது உளவியலையும் பெரிதும் பாதித்துவருகின்றது.
இந்நிலையில் கலகலப்பான கல்விச் சூழலையும் நண்பர்களையும் இழந்து தனித்துப் போன மாணவர்கள் தங்கள் மன அழுத்தங்கங்களில் இருந்து வெளிவரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கூறிவருகின்றனர்.