பிரான்ஸ் அதிபர் மீது திடீரென முட்டை வீசிய மாணவர்

பிரான்ஸ் நாட்டு உணவு முறையை ஊக்குவிக்க நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க லயான் நகருக்கு, மேக்ரன் சென்றிருந்தார். அப்போது ‘புரட்சி வாழ்க’ என முழக்கமிட்டபடி ஒரு நபர் முட்டையை மேக்ரன் மீது வீசினார். அந்த முட்டை அவர் தோள் மீது பட்டு உடையாமல் தெறித்து விழுந்தது. முட்டையை வீசிய நபர் பின்னர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் 19 வயதான மாணவன் ஒருவர் முட்டை வீசியது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட மனநல பரிசோதனையில் மனநல பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த மாணவர் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Comments are closed.