பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் இந்திய விஜயம் ரத்து!
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது இந்திய விஜயத்தை ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் புதிய முடக்க செயற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியேறியது.
இதன் பின்னர் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் மேற்கொள்ளவிருந்த முதலாவது வெளிநாட்டு பயணமாக இது அமைந்திருந்தது.
அத்துடன், இந்திய குடியரசு தினமான எதிர்வரும் 26 ஆம் திகதி அவர் இந்தியாவுக்கு விஜயம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தனது இந்திய விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.