பிறந்து 55 நாட்களேயேயான குழந்தையொன்று கொரொனா தொற்றினால் உயிரிழப்பு!

பிறந்து 55 நாட்களேயேயான குழந்தையொன்று கொரொனா தொற்றினால் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு பிரதேசத்தினை சேர்ந்த குறித்த குழந்தை, லேடி றிச்வே சிறுவர் வைத்தியசாலையில் (LRH) சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுமியின் பெற்றோர் தற்போது தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்களது உறவினர்கள் குழந்தையின் ஜனாஸாவினை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் குறித்த குழந்தையின் ஜனாஸா, விரைவில் ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்யப்படும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த தகவலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அலி சாஹிர் மௌலான உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Comments are closed.