பிற்பகல் வேளையில் மழை

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பிற்பகல் 2மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

Comments are closed.