பீஸ்ட் படத்தின் கதை இதுதான்

விஜய் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி, தொடர் சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் மூலம், பீஸ்ட்டின் கதை இதுதானா என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்திய உளவுத்துறையில் பணிபுரிந்து வரும் விஜய் { வீர ராகவன் } எதேர்ச்சையாக கடத்தப்படும் Mall ஒன்றில் சிக்கிக்கொள்கிறார். அப்போது, அரசாங்கத்திற்கும் தீவீரவாதிகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்துகிறார் செல்வராகவன்.

மேலும், கடத்தப்படும் Mall-ல் தனது துறையை சேர்ந்த ஸ்பை வீர ராகவன் இருப்பதை அறிந்து, அவரிடம் Mall-யையும், மக்களையும் காப்பாற்றும் பொறுப்பை செல்வராகவன் ஒப்படைக்கிறார். இந்த கடத்தலில் இருந்து விஜய் எப்படி மக்களை காப்பாற்றினார். இதன் பின்னணி என்ன, இந்த கடத்தலை திட்டமிட்டவர் யார்? என்பது தான் பீஸ்ட் படத்தின் கதையாக இருக்கும் என்று தெரிகிறது.

Comments are closed.