புகையிரத கடவையில் பாரிய விபத்து

திருகோணமலை கந்தளாய் புகையிரத கடவையில் காவல்துறை உத்தியோகத்தர்கள் பயணித்த கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் காவல்துறை அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.

காரின் சாரதி படுகாயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் கார் விபத்துக்குள்ளானதில் காவல்துறை அதிகாரியொருவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளதோடு, காரின் சாரதியும் காவல்துறை உத்தியோகத்தருமான மற்றொருவர் படுகாயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில் அதிதீவிர கிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கந்தளாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் கந்தளாய் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இவ்விபத்துச் சம்பவத்தில் மாத்தளை பகுதியைச் சேர்ந்த டி.எல் சிறிசேன வயது 55 என்ற காவல்துறை உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையிலிருந்து கந்தளாய்க்குச் சென்ற கார் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போத  விபத்துக்குள்ளானதாகவும் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை தூக்கத்தினாலே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் காவல்துறையினர்  தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

Comments are closed.