புதிய ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு நிறைவு

புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றில்  முடிவடைந்தது.

மொத்தமாக 225 பேரில், 223 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்த வாக்கெடுப்பில் பங்குக்கொள்ளவில்லை.

புதிய ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு இன்று முற்பகல் 10 மணியளவில் நாடாளுமன்றில் ஆரம்பமானது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முதலில் வாக்களித்தார்.

இதேவேளை, வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

Comments are closed.