புனித் இறந்த செய்தி, தற்கொலை செய்த ரசிகர்

கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் நேற்று மதியம் மாரடைப்பால் மரணம் அடைந்தது தென்னிந்தியாவில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினர் களையும் உலுக்கியது என்பதும் அவருடைய மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புனித் மறைவால் அவரது ரசிகர்கள் பேரதிர்ச்சியில் சில தவறான முடிவுகளை எடுக்கின்றனர். பெல்காம் பகுதியைச் சேர்ந்த ராகுல் என்ற 21 வயது இளைஞர் புனித் இறந்த செய்தி அறிந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதே போல முனியப்பன் மற்றும் பரசுராம் ஆகிய இரு ரசிகர்கள் இந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் மாரடைப்பு வந்து இறந்துள்ளனர்.

Comments are closed.