பெண் போலீஸ் ஆணாக மாறுவதற்கு அனுமதி

மத்தியபிரதேச சேர்ந்த பெண் காவலர் ஒருவர், தன்னை ஆணாக மாற்றுவதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் மனு அளித்து இருந்த நிலையில், அம்மாநில உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

அந்த பெண் காவலர், கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னை ஆணாக மாற்றுவதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று, காவல்துறை தலைமையகத்துக்கு மனு அளித்திருந்தார். இதுகுறித்த அவர் விருப்பம் என அரசிதழில் தகவல்  வெளியாகியது.

மேலும், காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, அந்தப் பெண் காவலரின் நடவடிக்கைகள் அனைத்துமே, ஆண் காவலர்கள் போன்றே இருப்பதையும், அவர் சிறு வயது முதலே பாலின அடையாள கோளாறு பாதிப்புக்கு ஆளாகி உள்ளதையும் உளவியல் ஆர்வலர்கள் கண்டறிந்து அதனை உறுதி செய்துள்ளனர்.

இதனை அடுத்து அவரின் மனுவை மத்திய பிரதேச உள்துறை அமைச்சகத்திற்கு காவல் தலைமையகம் பரிந்துரை செய்தது.

அதன் அடிப்படையில் அந்த பெண் காவலர், ஆணாக மாறுவதற்கு அறுவை சிகிச்சைக்கு தற்போது அனுமதி வழங்கி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அந்த மாநிலத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்குவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

நாட்டின் சட்ட விதிகளின்படி, ஒரு இந்தியக் குடிமகன் தனது மதம் மற்றும் சாதியை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், தனது பாலினத்தை தேர்வு செய்யும் உரிமை உண்டு என்பதன் அடிப்படையில், இந்த அனுமதியை மத்திய பிரதேச உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது என்று, அம்மாநில அரசு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

 

Comments are closed.