பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைத்தில் இன்று ஒரு கிலோ உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை 150 ரூபாவாக அதிகரித்து காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு 40 ரூபா  வரியை விதிக்க அரசாங்கம் அண்மையில் தீர்மானித்திருந்த நிலையில், உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சில நாட்களில் ஒரு கிலோ உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை 200 ரூபாவாக அதிகரிக்கக்கூடும் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

Comments are closed.