பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் 5,000 ரூபா கொடுப்பனவு
அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படவுள்ள 5000 ரூபா கொடுப்பனவு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் கட்டாயமாகப் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 5000 ரூபாவை வழங்க முடியாது என பெருந்தோட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளதாகத் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும் குறித்த தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்த வேண்டும் எனவும் இந்த விடயத்திலிருந்து பெருந்தோட்ட நிறுவனங்கள் வெளியேற முடியாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.