பெரும்பான்மையை தீர்மானிக்கும் ஜோர்ஜியா மாநில தேர்தல் வாக்களிப்பு நிறைவுபெற்றுள்ளது…

அமெரிக்க செனட் சபையின் பெரும்பான்மையை தீர்மானிக்கும் ஜோர்ஜியா மாநில தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற அமெரிக்க செனட் சபைக்கான ஜோர்ஜியா மாநில தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீத வாக்குகளைப் பெற்றுக் கொள்ளவில்லை.

இதனை அடுத்து, ஜோர்ஜியா மாநில சட்டங்களின் அடிப்படையில், நேற்றைய தினம் மீள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் அமெரிக்க செனட் சபைக்கு இரண்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

அத்துடன், அமெரிக்க செனட் சபையில் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி 52 ஆசனங்களையும், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி 48 ஆசனங்களையும் கொண்டுள்ளன.

இதன் அடிப்படையில், அமெரிக்க செனட் சபைக்கான ஜோர்ஜியா மாநில தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.