பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு

அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்துக் கட்டண உயர்வு இன்று (05) முதல் அமுலாகிறது.

இதற்கமைய. ஆகக்குறைந்த பேருந்துக் கட்டணம் 17 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அத்துடன், ஏனைய கட்டணங்கள், 17.44 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் மற்றும் உதிரிப் பாகங்களின் விலை அதிகரிப்பு காரணமாக, பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, போக்குவரத்து அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.