பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது

மீண்டும் பேருந்து பயண கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என விடயத்துக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாகவே பேருந்து பயண கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

எந்த விதத்திலேனும் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை பேருந்து பயண கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க இடமளிக்க போவதில்லை என அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தொடருந்து பயண கட்டணங்களை அதிகரிக்க எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.