பேருந்து கட்டணம் தொடர்பான இறுதி தீர்மானம் நாளை

ஜூலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள பேருந்து கட்டணங்கள் தொடர்பில் நாளை (28) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டுமென பேருந்து சங்கங்கள் நேற்று (26) தெரிவித்திருந்தன.

இதன்படி நாளை போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்தார்.

Comments are closed.