பேருந்து சாரதிகள், வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை
மேல் மாகாணத்தில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத 224 பயணிகள் பேருந்துகள் மற்றும் 71 குளிரூட்டப்பட்ட பயணிகள் பேருந்துகளின் சாரதிகளுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாத 485 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு நேற்று நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கைகளில் மொத்தமாக 439 காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, 764 பயணிகள் பேருந்துகள், 121 குளிரூட்டப்பட்ட பேருந்துகள் மற்றும் 1,112 வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.