பேலியகொட பொலிஸாரால் சட்டக்கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் அதிரடி!

பேலியகொட பொலிஸாரால் சட்டக்கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல் மாகாணத்தின் வட பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசேட விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

குறித்த மாணவன் றாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தம் செய்யுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இது தொடர்பில் கவனம் செலுத்திய பொலிஸ்மா அதிபர், மேல் மாகாணத்தின் வடக்கு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் பொலிஸ் விசேட விசாரணை பிரிவை விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் 3 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் இவ்வாறு பணி நித்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.