பொகவந்தலாவையில் ஆறு மாணவர்கள் உட்பட 16 பேருக்கு தொற்று

பொகவந்தலா பொது சுகாதார அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், பாடசாலை மாணவர்கள் அறுவர் உட்பட 16 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக,  பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரி வை.எல்.பி பஸ்நாயக்க தெரிவித்தார்.

கடந்த 16 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள், இன்று (23) வெளியானபோதே, 16 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொகவந்தலாவையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 134ஆக உயர்வடைந்துள்ளதாக, மேற்படி அதிகாரி தெரிவித்தார்.

Comments are closed.