பொகவந்தலாவை பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவன் உட்பட 6 பேருக்கு தொற்று உறுதி!!

பொகவந்தலாவை பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவன் உட்பட 6 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்படடுள்ளதாக பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுள் 4 பேர் கடந்த வாரம் கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தாருடன் தொடர்பிணைப் பேணியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களில் , ஒருவர் கொழும்பிலிருந்து வருகைத்தந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த மாணவனுடன் தொடர்புடைய 75 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொது சுகாதார வைத்திய அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.