பொருட்களுக்காக காத்திருக்கும் மக்கள்

சந்தையில் தொடர்ந்தும் சீனி, சமையல் எரிவாயு, சீமெந்து மற்றும் மண்ணெண்னை ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், நேற்று முன்தினம் 4,000 மெட்ரிக் டன் லிற்றோ நிறுவன சமையல் எரிவாயு தாங்கிய கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த நிலையில், நாடளாவிய ரீதியில் அது விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

எனினும், சமையல் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்கு நாட்டின் சில பகுதிகளில் மக்கள் இன்றும் வரிசையில் காத்திருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

Comments are closed.