பொருட்கள் வாங்கச்சென்றவர் மீது தாக்குதல்!

இதனால் தலை மற்றும் கை கால்களில் பலத்த காயமடைந்த நிலையில் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 07.30 மணி அளவில் நடந்தது.

சம்பவத்தில் முகமாலை வடக்கை சேர்ந்த தனபாலசிங்கம் விஜயகாந்த் (47) என்பவர் ரே காயமடைந்துள்ளார். இந்நிலையில் குறித்த நபர் பளை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முகமாலை பகுதியில் அண்மைக்காலமாக சட்டவிரோத செயற்பாடுகள், களவுகள் இடம்பெற்று வருவதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Comments are closed.