பொருத்தமற்ற 40,000 கிலோ உருளைக் கிழங்கு மீட்பு

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 40,000 கிலோகிராமுக்கும் அதிகமான உருளைக்கிழங்கு அடங்கிய கொள்கலன் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் உள்ள களஞ்சியசாலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை மாநகர சபையின் சுகாதார பிரிவு அதிகாரிகளால் இந்தக் கொள்கலன் மீட்கப்பட்டுள்ளது.

இந்த உருளைக்கிழங்கு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்த உருளைக்கிழங்கு தொகையைப் பாவனைக்குப் பயன்படுத்தும் வகையில் சேவையாளர்களை கொண்டு பொதி செய்து சந்தைக்கு விநியோகிக்கத் தயார்ப்படுத்தப்பட்டிருந்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக குறித்த களஞ்சியசாலை உரிமையாளர் பாவனைக்கு உதவாத பெரிய வெங்காய தொகையை பாகிஸ்தானிலிருந்து கொள்வனவு செய்திருந்தபோது, தம்புள்ளை மாநகரசபையின் சுகாதார பிரிவினரால் அவை மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.